சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களின் கட்சி பதவிகளை பறித்துள்ள எடப்பாடி பழனிசாமி, லீமா ரோஸ் மார்ட்டினின் கட்சிப் பதவியை பறிக்காதது கேள்விகளை எழுப்பியுள்ளது

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி 108 இடங்களைக் கைபற்றி ஆட்சி அமைத்துள்ளது. இதற்கிடையே, பெரும்பான்மையை நிரூபிக்க தவெக அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று சட்டசபையில் நடைபெற்றது.

அதிமுக பிளவு இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் 22 பேர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்த நிலையில், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிமுக கட்சிக்குள் பெறும் குழப்பம் வெடித்தது.

இதற்கிடையே, நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி, விஜய்க்கு ஆதரவளித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் கட்சி பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். பதவிகள் பறிப்பு எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து செயல்பட்ட நிலையில், சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் மொத்தம் 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, பல்வேறு தொகுதிகளை சேர்த்து, 17 மாவட்டங்களாக குறைத்து, அவற்றுக்கான புதிய மாவட்ட செயலாளர்களையும் பழனிசாமி நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலையச் செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து எஸ்.பி.வேலுமணி, அமைப்புச் செயலாளர், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து சி.வி.சண்முகம், அமைப்புச் செயலாளர், திருவாரூர் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து காமராஜ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.